என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 மாத குழந்தையை தவிக்க விட்டு பிரபல டிக்டாக் பிரபலம் மாயம்
- 2 பேரும் சமாதானம் ஆகி கொண்டனர்.
- செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 22).
இவர் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் கற்றுகொடுக்கும் மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த டிக்டாக் பிரபலம் பிரக லட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சிறு,சிறு தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் 2 பேரும் சமாதானம் ஆகி கொண்டனர்.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.பின்னர் கலையரசன் வெளியே சென்றார். அப்போது வீட்டில் இருந்த பிரகலட்சுமி தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு செல்வதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த கலையரசன் தனது மனைவியை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையில் கணவரிடம் கோபித்துக்கு கொண்டு 2 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு மாயமான டிக்டாக் பிரபலம் பிரகலட்சுமியை தேடி வருகிறார்கள்.