search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் இன்று 8 மையங்களில் நடந்தது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
    X

    தேர்வு மையத்தில் சோதனை செய்யும் போலீசார்

    திண்டுக்கல்லில் இன்று 8 மையங்களில் நடந்தது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

    • தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெறுவார்கள். இதற்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் புனிதவளனார் பள்ளி, எஸ்.எஸ்.எம். கல்லூரி, பி.எஸ்.என்.ஏ. கல்லூரி, சக்தி கல்லூரி, ஹோலிகிராஸ் உள்ளிட்ட 8 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 7246 பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரையும், மாலை 3 மணிக்கு தொடங்கிய தேர்வு 5.10 மணி வரை என இரு பிரிவாக தேர்வு நடைபெற்றது.

    காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உள்ளது. இவர்களுக்கு நாளை தேர்வு நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த 888 போலீசார் எழுத உள்ளனர். இதுதவிர தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏ.டி.ஜி.பி. வனிதா, சூப்பிரண்டு சினேகாபிரியா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் 8 டி.எஸ்.பி.க்கள் உள்பட 500 போலீசார் தேர்வு மைய கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தேர்வு வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராவால் பதிவு செய்யப்பட்டது. தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

    Next Story
    ×