search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் 7-ந் தேதி   1000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்
    X

    தென்காசி மாவட்டத்தில் 7-ந் தேதி 1000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

    • தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது.
    • இந்த தடுப்பூசி முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதி 1,000 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பு ஊசி செலுத்த முகாம் நடைபெற உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி போட வேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது.

    காலை, நண்பகல், பிற்பகல் என ஆட்டத்தில் உள்ள வெவ்வேறு இடத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வார்டு பகுதிகள்,பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×