என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பட்டுக்கோட்டை பகுதியை கலக்கி வந்த 70 வயது அரிவாள் திருடன் கைது
  X

  கைது செய்யப்பட்ட பழனியாண்டி.

  பட்டுக்கோட்டை பகுதியை கலக்கி வந்த 70 வயது 'அரிவாள் திருடன்' கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெட்டிக்காடு பகுதிகளில் கடந்த 4 மாதமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பறித்து சென்று வந்துள்ளார்.
  • கடந்த 2 வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

  பட்டுக்கோட்டை:

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

  பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளான கரம்பயம். செம்பாளுர், எட்டுப்புலிக்காடு, ஆலத்தூர், ஆலடிக்குமுளை, வீரக்குறிச்சி, பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பறித்து சென்று வந்துள்ளார்.

  மேலும் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதும், பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துச் செல்வதும், நடந்து வந்தது. இதனால் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் ஏற்பட்டு இருந்து வந்தது. இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் யார் ஈடுபடுகிறார்கள் என தெரியாமல் போலீசாரும் குழம்பி வந்தனர். போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் நபரை எப்படி கண்டறிவது என போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

  இந்த நிலையில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத நபரை உடனடியாக பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் சுபாஷ்ச–ந்திரபோஸ், பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோரின் மேற்பார்வை–யில்ப ட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் மற்றும் போலீசார் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து, சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளி கண்டுபிடித்தனர். இதில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர் 70 வயது நிறைந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமராவில் புகைப்படத்தை எடுத்து அவனை தேடிவந்தனர்.

  மேலும் விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும், பெரியசாமி என்பவரின் மகன் பழனி என்கிற பழனியாண்டி (வயது 70) என்பதும் தெரியவந்தது.

  மேற்படி நபர் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்ட தனிப்படையினர் மேற்படி நபர் இருக்கும் இடம் குறித்து கடந்த 2 மாதமாக தேடிவந்த நிலையில் மேற்படி குற்றவாளி ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்களத்தில் 35 வருடங்களாக தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குலமங்களம் கிராமத்தில் குற்றவாளியை பிடிக்க மாறுவேடத்தில் தனிப்படை போலீசார் தேடிச் சென்றபோது அங்கிருந்து பழனியாண்டி தப்பி ஓடிவிட்டார்.

  இந்நிலையில் நேற்று ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே பழனியாண்டி நிற்பதை அறிந்த தனிப்படை போலீசார் அவனை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

  35 வருடங்க–ளுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து 5 வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றதும், இவர் மீது திருச்சிற்றம்பலம், திருவோணம் காவல் நிலையத்திலும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து தண்டனை பெற்றிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் நகைகளை கொள்ளையடித்து ஒரத்தநாடு தாலுக்கா குலமங்கலம் கிராமத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் சொன்ன தகவலின் பேரில் நகைகள் கைப்பற்றப்பட்டது.

  மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாக திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரே இரவில் 4 வீடுகளில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை அறுத்து சென்றது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு குற்றவாளியை பிடித்த. பட்டுக்கோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யிலான தனிப்படையினரை உயரதிகாரிகள் பலர் பாராட்டினர்.

  Next Story
  ×