search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்- சுங்கத் துறையினர் நடவடிக்கை
    X

    சென்னை விமான நிலையம், தங்கம்

    சென்னை விமான நிலையத்தில் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்- சுங்கத் துறையினர் நடவடிக்கை

    • மின்னணு சாதனப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.
    • கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    துபாயிலிருந்து 03.08.2022 அன்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் மற்றும் 04.08.2022 அன்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஆகியவற்றில் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை தகவல் அளித்தது.அதன்படி, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானங்களில் சோதனையிட்டனர்.

    அப்போது, சென்னையை சேர்ந்த சையத் மீர்சாவின் மகன் முகமது இப்ராஹிம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹனிஃபாவின் மகன் சாதிக் அலி ஆகியோர் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


    இந்த சோதனையின்போது, 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் மற்றும் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு சோதனையில், அண்ணா பன்னாட்டு விமான நிலைய வரவேற்புப் பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறைக்குப் பின்னால் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 தங்க பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி, 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான 3.52 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×