என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீபாவளி பண்டிகைக்கு நாளை முதல் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
  X

  தீபாவளி பண்டிகைக்கு நாளை முதல் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
  • புறநகர் வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடை இயக்கப்படுகிறது

  சேலம்:

  தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை வெளி யூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உற்சாகமாகக் கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதையொட்டி அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

  சேலம் கோட்டத்தில் நாளை முதல் வருகிற 23-ந் தேதி வரை சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஓசூரில் இருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும், கோவை, திருப்பூரில் இருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  மேலும் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி ,கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சேலம் ,தர்மபுரி, ஈரோடு, திருவண்ணாமலை ,வேலூர், திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் இருந்து பெங்களூருக்கும், சேலம் ,திருச்சி ,மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருச்சி ,சிதம்பரம் ,திருப்பூர் ,கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும் என அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் புறநகர் வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடை இயக்கப்படுகிறது .இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

  Next Story
  ×