என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குரும்பூர் அருகே கவுன்சிலர் கணவர் கொலையில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு
  X

  கொலை செய்யப்பட்ட சரவணகுமார்.


  குரும்பூர் அருகே கவுன்சிலர் கணவர் கொலையில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கைது செய்யப்பட்ட 4 பேரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் போலீசார் இன்று காலை ஆஜர்படுத்தினர்.
  • தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

  குரும்பூர்:

  தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ராணிமகராஜபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது39). இவரது மனைவி மரியநிர்மலாதேவி. இவர் ஆறுமுநேரி பேரூராட்சி 14-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

  கொலை

  நேற்று முன்தினம் சரவணக்குமார் அம்மன்புரத்தில் டீ குடிப்பதற்காக சென்ற போது அவரை வழிமறித்து மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

  இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி ராணிமகராஜபுரத்தை சேர்ந்த கேசவன், முத்துசெல்வம், பழையகாயலை சேர்ந்த சிவபெருமாள் என்ற சிவா, முத்துராஜா ஆகிய 4 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.

  சிறையில் அடைப்பு

  சரவணக்குமாரின் தம்பி வேல்குமாரை கேசவன் தரப்பினர் வெட்டிக் கொன்றனர்.

  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கேசவன் தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் வர உள்ளது.

  இந்நிலையில் வேல்குமாரின் கொலைக்கு பழிக்குப்பழியாக தன்னை சரவணக்குமார் கொன்றுவிட கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவரை கேசவன் தரப்பினர் வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

  கைது செய்யப்பட்ட 4 பேரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் போலீசார் இன்று காலை ஆஜர்படுத்தினர்.

  பின்னர் அவர்கள் தூத் துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

  Next Story
  ×