என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் அருகே மது விற்ற 4 பேர் கைது
  X

  கோப்பு படம்

  திண்டுக்கல் அருகே மது விற்ற 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எரியோடு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட னர்.
  • அப்போது அப்பகுதியில் மதுவிற்ற 4 பேரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் இன்ஸ்பெ க்டர் சத்தியபிரபா தலைமை யிலான எரியோடு போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்ட னர்.

  சிறப்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கொடிக்கல்பட்டி, தொட்டணம்பட்டி ரெயில்வே பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற அருப்பம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52) என்பவரை கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  சாமிமுத்தன்பட்டி அம்மா குளக்கரை அருகே மதுவிற்ற பிச்சை அந்தோணி என்ற தங்கராஜ் (56) என்பவரை கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் தலைமை யிலான போலீசார் மாரம்பாடி கல்லறைத் தோட்டம் பகுதி யில் ரோந்து சென்றபோது அங்கு மதுவிற்ற வேளாங்கன்னி (42) என்பவரை கைதுசெய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்கராயர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மதுவிற்ற அந்தோணி (33) என்பவரை கைதுசெய்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×