என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நிலக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது
  X

  கோப்பு படம்

  நிலக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முசுவனூத்து கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
  • இந்த மோதல் காரணமாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  நிலக்கோட்டை:

  நிலக்கோட்டை அருகில் உள்ள முசுவனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன்(22). இவருக்கும் மிளகாய்பட்டிைய சேர்ந்த ரவி என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  நேற்றுஇரவு ரவி முசுவனூத்து கிராமத்திற்கு பால் கேன்கள் ஏற்றச்சென்றார். அப்போது அங்கு வந்த ஆதித்யன், மணிமாறன் ஆகியோர் எப்படி நீ எங்கள் ஊருக்கு வரலாம் என தாக்கியுள்ளனர்.

  இதுகுறித்து ரவி தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதித்யன் மற்றும் மணிமாறனை அடித்து தங்கள் கிராமத்திற்கு தூக்கிச்சென்று அமர வைத்தனர்.

  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

  அவர்கள் ஆதித்யன், மணிமாறன், ரவி, அர்வீஸ் ஆகியோரை அழைத்துச்சென்றனர். அவர்கள் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  Next Story
  ×