என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது
  X

  கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

  கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நகர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • கஞ்சா கடத்திய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

  கம்பம்:

  தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நகர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  கோம்பை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று ெகாண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தனர்.

  அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கோம்பையை சேர்ந்த ருத்ரன்(26), ஞானேசன்(44), அலெக்ஸ்பாண்டியன்(24), நெல்லுகுத்தி புளியமரம் தெருவை சேர்ந்த ஈஸ்வரன்(48) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×