search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மினி வேனில் கடத்தி வந்த 326 கிலோ குட்கா பறிமுதல்
    X

    கோவையில் மினி வேனில் கடத்தி வந்த 326 கிலோ குட்கா பறிமுதல்

    • போலீசார் அரிசி பாளையம் வேளந்தாவலம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • குட்காவை பதுக்கி வைத்து விற்ற 17 பேரை கைது செய்த போலீஸ் அவர்களிடம் இருந்து 47 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை போலீசாருக்கு அந்தப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் போலீசார் அரிசி பாளையம் வேளந்தாவலம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தினர்.

    போலீசாரை பார்த்ததும் மினி வேனில் இருந்த 2 வாலிபர்கள் வாகனத்தை நிறுத்தி ஓட்டம் பிடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் துரத்தி ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் மினி வேனை சோதனை செய்தனர். இதில் 326 கிலோ 60 கிராம் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினி வேன் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மடக்கிப் பிடித்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுக்கரை அட்லாண்டிக் நகரை சேர்ந்த ஆனந்த் (வயது 23) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது கேரளாவை சேர்ந்த அருண் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தப்பியோடிய அருணை தேடி வருகின்றனர். இதேபோன்று கோவை புறநகர் பகுதியான வடவள்ளி, செட்டிப்பாளையம், சூல்தான்பேட்டை, சூலூர், ஆனைமலை, மேட்டுப்பாளைமயம், காரமடை உள்பட பகுதிகளில் குட்காவை பதுக்கி வைத்து விற்ற 17 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×