search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    • கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா நடக்கிறது.
    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    நாடு முழுவதும் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா நடக்கிறது. விழாவில் கலெக்டர் சமீரன் பங்கேற்று தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசார், மருத்துவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்குகிறார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

    இதேபோல் மாநகராட்சி வளாகத்தில் கமிஷனர் பிரதாப், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தேசிய கொடி ஏற்றுகிறார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்படுகிறது.

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் அனைத்து பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றினால் பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.மாவட்ட எல்லை பகுதிகளிலும், மதுக்கரை, மீனாட்சிபுரம், ஆனைகட்டி, வாளையார் உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்ப–டுகின்றன.

    இதேபோல் கோவையில் உள்ள காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், காரமடை, அன்னூர் உள்ளிட்ட பஸ் நிலையங்க–ளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு–ள்ள–னர். அடிக்கடி சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் டி.எஸ்.பி.யாஸ்மின், இன்ஸ்பெக்டர் சிவகாமி தலைமையில், 200க்கும் ேமற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ரெயில் நிலைய–த்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடைமை–களையும் சோ–தனைக்கு உட்படுத்தினர்.

    ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பா–ரங்கள் மற்றும் ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிகிறார்களா என்பதையும் கண்காணித்தனர்.இதேபோல் போத்தனூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உஷார்ப டுத்தப்பட்டு ள்ளனர்.விமானநிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ளூர் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமானநிலையத்தை சுற்றி–யுள்ள பகுதிகளில் டிரோன் பயன்படுத்தக்கூடாது எனவும், விமான நிலைய பகுதியில் டிரோன் பறக்கவும் போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    Next Story
    ×