search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யம்பேட்டை பேரூராட்சி  9-வது வார்டு தேர்தலுக்கு 3 வாக்குப்பதிவு எந்திரங்கள்-  கலெக்டர் தகவல்
    X

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு தேர்தலுக்கு 3 வாக்குப்பதிவு எந்திரங்கள்- கலெக்டர் தகவல்

    • 2022-ஆம் ஆண்டு நகரப்புற அமைப்புகளுக்கான சாதாரண உள்ளாட்சி தேர்தல் நடை பெற்ற முடிந்துள்ள நிலையில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 9 -க்கான தற்செயல் தேர்தல் வருகின்ற 9.7.2022 அன்று நடைறவுள்ளது.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடத்த–ப்பட்டது. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் 3 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும் 3 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 9-ல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு நகரப்புற அமைப்புகளுக்கான சாதாரண உள்ளாட்சி தேர்தல் நடை பெற்ற முடிந்துள்ள நிலையில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 9 -க்கான தற்செயல் தேர்தல் வருகின்ற 9.7.2022 அன்று நடைறவுள்ளது.

    இந்த தேர்தல் நடைபெற உள்ள 2 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படு–த்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடத்த–ப்பட்டது. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் 3 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும் 3 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் சீரற்ற மயமாக்கல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×