என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளி, கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்
  X

  பள்ளி, கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
  • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

  சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றதால் தனியாக வீட்டில் இருந்தார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் மாணவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்த தருமபுரி டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  அதேபோல் கடத்தூர் அருகே உள்ள தேக்கல் நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  அதேபோல் மாரண்டஅள்ளி அருகே உள்ள பெலமாரன அள்ளி பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

  இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்துள்ளார். சம்பத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் காணவில்லை.

  இது குறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×