என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம்
Byமாலை மலர்5 Sep 2023 7:47 AM GMT (Updated: 5 Sep 2023 7:55 AM GMT)
- உதயநிதி மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
- முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
புதுடெல்லி:
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதி உள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், உதயநிதி பேசிய பேச்சு சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறுப்பு பேச்சால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யலாம். உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×