search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் கலந்து கொண்டவர்கள்.
    X
    விழாவில் கலந்து கொண்டவர்கள்.

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரில் 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.  இதற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கி பட்டமளிப்பு விழா தொடக்க உரையாற்றினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் விழாவில் கலந்து கொண்டு,  தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.காம். கணினி அறிவியல், வரலாறு, பொருளாதாரம், கணிதம், வேதியியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல், புள்ளியியல் துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதில் தமிழில் 5 மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றனர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை தமிழில், 17 மாணவிகளும், உயிர் வேதியல் துறையில் 3 மாணவிகளும் பெற்றனர். பி.காம். (கணினி அறிவியல் மாணவிகள் பல்கலைக்கழகத் தரவரி சையில் 10 பேரும், உயிர் வேதியியல் துறையில், இளங்கலை, முதுநிலையில் பல்கலைக்கழக அளவில் 10 மாணவிகளும், தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர், ஆய்வு படிப்பில் 2 மாணவிகளும், பல்கலைக்கழக அளவில் தர வரிசை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

    2016-2019, 2017-2020, 2018-2021 ஆகிய ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்ற இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் அனைவரும் பட்டம் பெற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் கணிதத்துறைத் தலைவர் உமா, கணினி துறை லாவண்யா, ஆங்கிலத் துறை கல்பனா, வேதியியல் துறை வள்ளி சித்ரா, தமிழ்த்துறை சிவகாமி, உயிர் வேதியியல் துறை ஜெயந்தி, உதவிப் பேராசிரியர்கள் முரளி, பரமகுரு, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×