என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விஜயதாரணி
  X
  விஜயதாரணி

  தமிழக காங்கிரசுக்கு விஜயதாரணி தலைவர்?- ஜோதிமணியும் தீவிர முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் ஜோதிமணி இருப்பதால் விஜயதாரணிக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  சென்னை:

  தமிழக காங்கிரசில் டெல்லி மேல்சபை தேர்தலுக்கான முட்டல் மோதல் நிறைவடைந்துவிட்டதால் அடுத்ததாக மாநில தலைவர் பதவிக்காக களம் இறங்கி இருக்கிறார்கள்.

  கே.எஸ்.அழகிரி மாநில தலைவராகி 3½ ஆண்டுகள் ஆகிவிட்டன. பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

  மாநில தலைவர் பதவியை கைப்பற்ற பலர் முயற்சித்து வருகிறார்கள். செல்லக்குமார் எம்.பி., நாசே.ராமச்சந்திரன், தங்கபாலு, இளங்கோவன், ஜோதிமணி எம்.பி., விஜயதாரணி எம்.எல்.ஏ. என்று பலரும் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள்.

  இந்த முறை பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விஜயதாரணி எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைவருக்கான தகுதி தனக்கு இருப்பதாக விஜயதாரணி வெளிப்படையாகவே கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை பெண் தலைவர்கள் யாரும் நியமிக்கப்பட்டதில்லை. எனது அனுபவம், உழைப்பு, கட்சி மீதான விசுவாசம் இவையெல்லாம் தலைமைக்கு தெரியும். தலைவர் பதவிக்கான தகுதி எனக்கு இருப்பதாக நம்புகிறேன். எனவே போட்டியில் நானும் இருக்கிறேன். அதற்கு மேல் முடிவெடுக்க வேண்டியது மேலிடம்தான்.

  பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதை ஏற்க முடியாது. இது குற்றவாளிகளுக்கு துணிச்சலை ஏற்படுத்தும். குற்றங்களை அதிகரிக்க செய்யும். இந்த செயல்கள் தமிழகத்தின் மீதான பார்வையை மாற்றி இருக்கிறது. தமிழக அரசின் மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

  எங்கள் கட்சியில் எனக்கும் செல்வ பெருந்தகைக்கும் முன்பகையோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. பெண்களை விமர்சனம் செய்யும்போது ஒரு சில விசயங்களை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கிடையில் தலைவர் பதவியை கைப்பற்ற ஜோதிமணி எம்.பி.யும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் ஜோதிமணி இருப்பதால் விஜயதாரணிக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Next Story
  ×