search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம் வாபஸ்
    X
    போராட்டம் வாபஸ்

    அத்திப்பட்டு ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்- பேச்சுவார்த்தையில் சமரசம்

    ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரிகளில் கியாஸ் நிரப்பப்பட்டு பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் அமைந்துள்ள ஐ.ஓ.சி.எல். எனப்படும் இந்தியன் ஆயில் பெட்ரோனஸ் தொழிற்சாலையில் 49 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 வருடமாக வேலை செய்து வருகின்றனர்.

    அவர்களின் கோரிக்கைகளான பணி நிரந்தம், ஊதிய உயர்வு, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, விபத்துகாப்பீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களின் கோரிக்கை வெற்றி பெறும்வரை உள்ளிருப்பு போராட்டம் நீடிக்கும் என்று தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் தகவலறிந்த துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., வட்டாட்சியர் ரஜினிகாந்த், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் கம்பெனி நிர்வாகத்தின் இடையே பேச்சுவார்த்தை நடத்தி 3 மாதத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தனர். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரிகளில் கியாஸ் நிரப்பப்பட்டு பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

    Next Story
    ×