என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே நத்தத்தில் கஞ்சா வியாபரிகளின் வங்கிக்கணக்கை போலீசார் முடக்கினர்
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் தொடர்ந்து வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

  ஆந்திராவில் இருந்து காரில் அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த குணசேகரன்(38), அழகு, அம்சபாண்டி ஆகியோர் கஞ்சாவை கடத்தி வந்தனர்.

  இவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைதொடர்ந்து வத்திப்பட்டியை சேர்ந்த மலர்(49), பனியாமலை, பாக்கியம், சக்கிலியன்கொடையை சேர்ந்த ராமச்சந்திரன்(20) ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

  இவர்களின் குற்றநடவடிக்கையை ஒடுக்கும் வகையில் அனைவரது வங்கி கணக்குகளையும் எஸ்.பி சீனிவாசன் அறிவுறுத்தலின்படி நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜசேரகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா ஆகியோர் முடக்கினர்.

  Next Story
  ×