என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்லும் பள்ளி மாணவி
  X
  மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்லும் பள்ளி மாணவி

  அரியலூர் மாவட்ட பகுதிகளில் மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடை உழவுக்கு ஏற்ற வகையில் மழை பெய்ததால் தா.பழூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  அரியலூர்:

  அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தா.பழூரில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழை காரணமாக தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  கோடை உழவுக்கு ஏற்ற வகையில் நேற்று மழை பெய்ததால் தா.பழூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென மாலை முதல் இரவு வரை லேசான மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது.
  Next Story
  ×