search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்பாட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

    காரிமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    காரிமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி,  கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக அத்யாவசியப் பொருட்களின் விலையே ற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்பாட்டத்திற்க்கு ,வி.சி நகரசெயலாளா் அம்பேத்கர் முன்னிலை வகித்தார்.  கம்னிஸ்டு கட்சி ஓன்றிய செயலாளா் ஜெயராமன் தலைமை தாங்கினார் வழக்கறிஞா் மாதையன் சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது பெட்ரோல் டீசல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட வலியுறுத்தியும், வருமான வரி வரம்பிற்கு உட்படாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 வழங்கிடவும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி சமூக பாதுகாப்புடன் கூடிய புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

    இந்ந ஆர்ப்பாட்டத்தில் விசிக  மாவட்டபொருலாளா் ராஜா, விசிக ஒன்றிய செயலாளா் மருத்துவா் முருகேசன் மாவட்ட துணை அமைப்பாளா் பிரகாஷ், சிபிஜ ஒசெ கோபால், மற்றும் மகளிரணி சுமதி,சரிதா, மஞ்சு,  சதீஸ்குமார், கண்ணன்   மாரியப்பன்  ,முருகேசன், கலந்து கொண்டனா்.
    Next Story
    ×