search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துண்டறிக்கை விநோயம் செய்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    துண்டறிக்கை விநோயம் செய்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    லஞ்சம் வாங்கும் வி .ஏ .ஓ .வை கண்டித்து துண்டறிக்கை விநியோகம் செய்த இளைஞர்கள்

    லஞ்சம் வாங்கும் வி .ஏ .ஓ .வை கண்டித்து இளைஞர்கள் துண்டறிக்கை விநியோகம் செய்தனர்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தை உள்ளடக்கி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இந்த சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.  இங்குள்ள மக்கள் அரசின் திட்டங்களை, சலுகைகளை பெறுவதற்கு வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றிதழ்களை வாங்க அலுவலகத்துக்குச் சென்று வருகின்றனர். 

    ஆனால் இங்கு பணி யாற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி யாளர் இரு வரும் பொது மக்களுக்கு செய்யக்கூடிய அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. 
    இதில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முதியவர்களிடம் ஒரு மனுதாரரிடம் 5000 வரை கொடுத்தால் மட்டுமே அந்த மனுக்களை பரிந்துரை செய்வதாகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாரிசு மற்றும் ஆதரவற்ற விதவை சான்றிதழ் சுமார் 50,000 ரூபாய் வரையிலும், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு 10 ஆயிரம் வரையிலும் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 
    லஞ்சப் பணம் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வேலை செய்து கொடுக்காமல் நீண்ட நாட்களாக அலை கழிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளந்து கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலருக்கு கேட்டுள்ளார். 

    அப்பொழுது பணம் ரூ.6000 கொடுத்தால் உடனடியாக அளவீடு செய்து கொடுப்பதாக பரமசிவம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பரசுராமன் 6,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
    ஆனால் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத காலமாக அளவீடு செய்ய வராததால், அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது பேசிய கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்க வில்லை, கிடைத்தவுடன் அளவிடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். 

    ஆனால் பணம் பெற்றுக் கொண்டும் ஏன்? காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக் கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பொது மக்களிடம் அதிகப்படியாக லஞ்சம் பெறுவதாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

    தொடர்ந்து ஊழல் தடுப்புப் பிரிவினர் கொடுத்த துண்டறிக்கைகளை கிராமம் முழுவதும் இளைஞர்கள் ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினியிடம் கேட்ட போது, சில்லாரஹள்ளி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் மக்களிடம் லஞ்சம் பெறும் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×