என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
  X
  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

  நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழகத்தின் வளர்ச்சி.
  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.  

  அப்போது மேடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி.  திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது.

  நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது.

  இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழகத்தின் வளர்ச்சி.

  அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுகிறோம். ஒன்றின் அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம் ஆகும்.

  ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழகத்தின் முக்கிய பங்காற்றுகிறது.

  கட்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம். ஹிந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

  நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எய்திட, அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
  Next Story
  ×