என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  அனுமதியின்றி இயங்கிய கேரள வாகனத்தை தடுத்தவருக்கு மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரணியல் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  இரணியல்:

  இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை அடுத்த ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜினோ (வயது 42). இவர் அகில இந்திய வாகன ஓட்டுநர் பேரவையின் துணைச் செயலாளராக உள்ளார். இவர் இலந்தவிளை பகுதியில் சென்றபோது கேரள பதிவு எண் கொண்ட பஸ்சில்  பயணிகள் ஏற்றப்படுவதை பார்த்து உள்ளார்.

  தமிழக வாகன போக்குவரத்து துறையின் உரிய ஆவணம் இன்றி ஆலங்கோடு சரல்விளையை சேர்ந்த அஸ்வின் (30)  பயணிகளை ஏற்றி உள்ளார்.
  இதை ஜினோவும் அவரது நண்பரும் தட்டி கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் அஸ்வினும் அவரது நன்பர்கள் 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

  மேலும் அவர்கள் பஸ்சால் ஜினோவின் காரை இடித்து தள்ளி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கார் சேதமடைந்தது. இதுகுறித்து ஜினோ கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் அஸ்வின் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×