என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்னல் தாக்கி ஆடுகள் பலி
  X
  மின்னல் தாக்கி ஆடுகள் பலி

  பெரியபாளையம் அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியபாளையம் அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பெரியபாளையம்:

  பெரியபாளையம் அருகே உள்ள மாகரல் ஊராட்சி, வேட்டைக்காரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. நேற்றுமாலை இவர் வயல்வெளியில் 19 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

  திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 9 ஆடுகள் பலியானது. எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கோடுவெளி குழந்தைவேலு, மாகரல் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா செல்வம் ஆகியோர் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆறுதல் கூறினர். கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா பலியான ஆடுகளை சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்தார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி உடன் இருந்தார்.

  Next Story
  ×