search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
    X
    கன்னியாகுமரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

    கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடைபெற்றது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். 

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன் பாபு, அரசு பள்ளி ஆசிரியைகள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமூதாய நலக்கூடங்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தில் விழிப்புணர்வு மற்றும் சுற்றறிக்கை அனுப்புதல்,

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக சுய உதவி குழுக்கள், தேசிய ஊரக பணியாளர்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து பஞ்சாயத்துகளிலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    Next Story
    ×