என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள ராமன்தொட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் கிருஷ்ணகிரி போலீசார் அவ்வழியாக ரோந்து சென்றனர். 

  அப்போது சந்தேகத்து க்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை மடக்கி விசாரித்தனர்.  அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான சுமார் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சிக்கிய 3 பெரும் சோளிங்கர் வழியாக ஆந்திராவுக்கு கஞ்சாவை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சையது மோதின், வேணுகோபால்,சுருள்ராஜ் ஆகிய அந்த 3 போரையும் கைது செய்தனர். 
  Next Story
  ×