search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டயர் வெடித்த அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
    X
    டயர் வெடித்த அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

    பென்னாகரம் அருகே அரசு பஸ் டயர் டமால்- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

    பென்னாகரம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
    பெரும்பாலை, 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இருந்து  மேச்சேரி வழியாக சேலத்திற்கு இருமுறையும், ஒகேனக்கல்லிற்கு மூன்று முறையும் இந்த அரசு பஸ் வந்து செல்கிறது. நேற்று இந்த அரசு பஸ்சில் டிரைவர் சுதாகர் மற்றும் நடத்துனர் சுரேஷ் என்பவர் இருந்தனர். 

    இந்நிலையில்  நேற்று மாலை மேச்சேரியில் இருந்து பென்னாகரம் நோக்கி சென்ற பஸ் பெத்தானூர் என்னும் இடத்தில் பலத்த சத்தத்துடன் டயர் வெடித்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென பஸ் நின்றதால் டிரைவர் கீழே இறங்கி பார்க்கும்பொழுது பின்பக்க டயர் வெடித்தது தெரியவந்தது. 

    இதனையடுத்து பஸ்சில் பயணம் செய்த பயணிகளை  வேறு ஒரு பஸ்சில் மாற்றி அனுப்பி வைத்தனர். திடீரென புகையுடன் பயங்கர சத்தம் கேட்டதால்  அருகில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் மழைக்காலங்களில்  பஸ் உள்ளே மழைநீர் கொட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் பயணிகளிடையே எழுந்துள்ளது. மேலும் டயர் வெடித்து தாமதமானதால் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதி ப்பட்டனர்.
    Next Story
    ×