என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அம்மாபாளையம் கிராமத்தில் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி வைத்திருந்த காட்சி.
  X
  அம்மாபாளையம் கிராமத்தில் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி வைத்திருந்த காட்சி.

  ஆரணி அருகே தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரணி அருகே தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்களால் பரபரப்பை ஏற்பட்டது.
  ஆரணி:

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மா பாளையத்தில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

  இங்குள்ள ஏ.எஸ்.ஆர் நகர், காமராஜ் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 6மாதத்திற்கும் மேலாக தெரு மின்விளக்குகள் எரியவில்லை.

  இதனால் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படுவதாகவும், பாம்பு, தேள் போன்றவை ஊடுருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

  இது சம்மந்தமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிட குடியிருப்பு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வீட்டில் மின் விளக்கை அணைத்துவிட்டு, தெருவில் உள்ள மின் கம்பங்களில் தீ பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் சிறிது நேரம் அந்த கிராமம் இருளில் மூழ்கியது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×