என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
  X
  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

  ஓசூரில் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூரில் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  ஓசூர், 

  முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவாக பேசியதாக கண்டனம் தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பில் நேற்று ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநில செயலாளர்கள் வீர.முனிராஜ், தேன்.கு.அன்வர், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். 

  இதில் மாவட்ட பொருளாளர் மாதேஷ், பிரவீண், தாவூத், அசேன், மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா மற்றும் கட்சியின திரளாக கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜகோபாலன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின்போது கட்சியினர் கைகளில் பிடித்திருந்த சீமான் படம் பொறித்த பேனருக்கு, செருப்பு அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சீமான் படத்தை செருப்பால் அடித்து அவமரியாதை செய்தனர். மேலும் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  ஆர்ப்பாட்ட முடிவில் சீமான் உருவப்படத்தை, காங்கிரசார் தீ வைத்து கொளுத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும் இதுதொடர்பாக காங்கிரசார் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×