என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  கோவையில் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .
  கோவை:

  கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதிய உயர்வு மற்றும் அகவிலைப்படியை உடனே வழங்க கோரி மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அரங்கநாதன், மாநில துணை தலைவர் சேதுராமன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து கழக மாவட்ட துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதிய உயர்வு மற்றும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

  Next Story
  ×