என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
  சென்னை:

  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இந்த சோதனையில் முதலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் 3 மாணவர்களுக்கும், நேற்று 3 மாணவர்களுக்கும் தொற்று உறுதியானது. இதனால் நேற்று வரை 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

  இந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

  கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது. இதையடுத்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

  Next Story
  ×