search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் 2.53 கோடி பேர் இலவச பயணம்

    வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் 2.53 கோடி பேர் இலவச பயணம் செய்துள்ளனர்.
    வேலூர்:

    அரசுப் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணச் சலுகைத் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2 கோடியே 53 லட்சத்து 52 ஆயிரத்து 336 பேர் பயன்பெற்றிருப்பதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக மகளிருக்கு அரசுப் பஸ்களில் கட்டணமில்லாமல் இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும், உங்கள் தொகுதியில் முதல்வர் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார்.

    அதன்படி, கடந்த 2021 மே 8-ந்தேதி முதல் 2022 மே 22ந்தேதி வரை வேலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பஸ்களில் 2 கோடியே 48 லட்சத்து 79 ஆயிரத்து 820 மகளிர், திருநங்கைகள் 21 ஆயிரத்து 126 பேரும், மாற்றுத்திறனாளிகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 205 பேரும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 9 ஆயிரத்து 185 பேரும் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

    குறிப்பாக, பள்ளிகொண்டா, குடியாத்தம், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் நாள்தோறும் சுமார் 15,000 பேர் இலவச பயணம் செய்து வருகின்றனர்.

    இந்தத் திட்டம் மூலம் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மகளிரும் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த சிறறப்பான திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு செலவாகும் பயண தொகை அவர்களுக்கு சேமிப்பாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×