search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடைவிழா மலர்கண்காட்சியை முன்னிட்டு பழங்களால் அமைக்கப்பட்ட நுழைவு வாசல்.
    X
    கோடைவிழா மலர்கண்காட்சியை முன்னிட்டு பழங்களால் அமைக்கப்பட்ட நுழைவு வாசல்.

    ஏற்காட்டில் கோடை விழா இன்று மாலை தொடக்கம்

    மலர் பழ கண்காட்சியுடன் ஏற்காட்டில் கோடை விழா இன்று மாலை நடக்கிறது.
    ஏற்காடு

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 45-வது கோடைவிழா, மலர் கண்காட்சி இன்று தொடங்கி, வருகிற  ஜூன் 1-ந்தேதி வரை  8 நாட்கள் நடக்கிறது. அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், மதிவேந்தன் ஆகியோர் கோடை விழா, மலர் கண்காட்சியை இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகின்றனர். இதற்காக ஏற்காடு கலையரங்கம் முன்பு விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.


    அண்ணா பூங்–கா–வில் மலர்களால் பிரமிக்க வைக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.  குழந்தைகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும்  கவர தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் அண்ணா பூங்காவில் 5 லட்சம் மலர்களால் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்படுகின்றன.


    இந்த நிலையில்  மலர் கண்காட்சிக்கு மேட்டூர் அணை, மகளிர் இலவச பஸ், பட்டாம்பூச்சி, பழங்களுடன் கூடிய மாட்டு வண்டி,  வள்ளுவர் கோட்டம் போன்ற வடிவங்கள் அமைக்கும் பணி நேற்று நிறைவடையவில்லை. இதனால்   தோட்டக்கலை துறை ஊழியர்கள்,தொழிலாளர்கள்  நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து  விடிய விடிய இன்று காலை வரை பணியில் ஈடுபட்டனர். மேலும் நள்ளிரவில்   அண்ணா பூங்கா, ஏரி பூங்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அங்கரிக்கும் பணி நடந்தன.


    விழாவில்  அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் பல்துறை பணி விளக்க முகாம் நடக்கிறது. கால்நடை துறை சார்பில் செல்ல பிராணிகள் கண்காட்சி, பாரம்பரிய உணவு போட்டி, கோலப்போட்டி, படகுப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சர்வதேச திரைப்படங்கள், இன்னிைச நிகழ்ச்சி, வண்ணமிகு கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறுவதால் கோடை விழா சிறப்பாக  இருக்கும் என தோட்டக்கலை ஊழியர்கள் தெரிவித்தனர். 


    ஏற்காட்டில் இன்று மாலை 4 மணிக்கு கோடை விழா - மலர் கண்காட்சி தொடங்குகிறது.  இதனிடையே ஏற்காடு வனச்சரகராக பணியாற்றிய உமாபதி திடீரென  மதுரை மண்டலம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை  புலிகள் காப்பகத்துக்கு இட–மாற்றப்பட்டுள்ளார்.  அவருக்கு பதிலாக திருச்சி மண்டலம் அரியலூர் வனச்சரகர் பழனிவேல் ஏற்காடு வனச்சரகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×