என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  தருமபுரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  தருமபுரி, 

  தருமபுரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

  கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட் ராஜ், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட அணித்தலைவர்கள் மதியழகன், புவனேஷ், இமானுவேல், சங்கீதா, மாணிக்கம், கலைச்செல்வன், செபாஸ்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

  பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போன்று தமிழக அரசும் பெட்ரோல- டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சிவன், ஐவண்ணன், முரளி, கிருத்திகா, ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் டாக்டர் சுப்பிரமணியம், முருகேசன்,நிர்வாகிகள் காவேரி வர்மன், சிவசக்தி, மவுனகுரு உள்ளிட்ட வட்டார, நகர தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சோபன் நன்றி கூறினார்.
  Next Story
  ×