என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  நல்லம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்லம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது.
  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் செக்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது40). இவரது மனைவி மேனகா காந்தி (37).இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
   இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக மேனகா காந்தி மனநிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

  நேற்று காலை கடைக்குச் சென்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குமார் வீட்டிற்கு வரும் வழியில் தேடிப் பார்த்தபோது அங்கு உள்ள கிணற்றின் அருகில் அவரது செருப்பு இருந்தது. 

  உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்தபோது மேனகா காந்தி சடலமாக கிடந்தார். 
  இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×