என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சோபியா
  X
  சோபியா

  பஞ்சப்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்த பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சப்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
  பாலக்கோடு, 

  தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே காடுசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அழகேசன், இவரது மனைவி சோபியா (வயது21), இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

  சோபியா அப்பகுதியில் உள்ள கார்மெண்ட் கம்பெனியில் டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்து அவரது கணவர் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
  விசாரணையில், சோபியா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே உள்ள பென்னங்கூர் பகுதியை சேர்ந்த லட்சுமிபதி (வயது25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. 

  இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சோபியா காடுசெட்டிப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சோபியா கடந்த 14-ம் தேதி எலி மருந்து தின்று மயங்கி விழுந்து கிடந்தார். 

  அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சோபியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×