search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேசின் நிர்வாகத் திறமை மற்றும் சமூக சேவையை பாராட்டி வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
    X
    வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேசின் நிர்வாகத் திறமை மற்றும் சமூக சேவையை பாராட்டி வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி மாலை அம்மன் கோவிலில் இன்று மாலை பொங்கல் விழா

    கோவில்பட்டி மாலை அம்மன் கோவிலில் இன்று மாலை பொங்கல் விழா நடைபெறுகிறது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் வணிக வைசிய நடுநிலைப்பள்ளி கண்ணகி கலையரங்கத்தில் வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதே போல் தினமும் இரவு 7 மணிக்கு முளைப்பாரி வைத்து கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடுகள் நடைபெறு கிறது.

    வணிக வைசிய இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேசின் நிர்வாகத்திறமை மற்றும் சமூக சேவையை பாராட்டி வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.

    இன்று கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடியபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் திருக்கோவில் முன்பு பொங்கல் விழா, மாவிளக்கு மற்றும் முளைப்பாரி நகர்வலம் வருதல் தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இரவு 11 மணிக்கு மேல் சாமக்கொடை நடைபெற உள்ளது. 26-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    Next Story
    ×