என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  பல்வேறு கோரிக்கை அடங்கிய 175 மனுக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு கோரிக்கை அடங்கிய 175 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.
  பெரம்பலூர்:


  பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 175 மனுக்களை அளித்தனா்.

  கூட்டத்துக்கு தலைமை வகித்த கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.


  தொடா்ந்து, சிறு, குறு தொழிலுக்கான ரூ. 25,000 மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மானியமும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மூலம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து

   4 நபா்களுக்கு ரூ. 3.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய ஆட்சியா், செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் ஆட்சியரகக் கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலுாா் மாவட்டத்தைச் சோ்ந்த 

  சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தாய்மொழி வளா்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞா்களின் நினைவைப் போற்றும் வகையிலான நிரந்தரப் புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்டாா்

  Next Story
  ×