search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரியில் மழை நீடிப்பு- சுருளோட்டில் 21.4 மி.மீ மழை

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நிரம்பி வருகிறது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. களியல், குழித்துறை, தக்கலை, திற்பரப்பு, அடையாமடை பகுதிகளில் மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 21.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.99 அடியாக உள்ளது. அணைக்கு 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 644 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.04 அடியாகவும் உள்ளது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பொய்கை அணையின் நீர்மட்டம் 17.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.85 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் முக்கடல் அணை நீர்மட்டம் 8.10 அடியாக உயர்ந்துள்ளது. அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×