என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அரக்கோணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரக்கோணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
  அரக்கோணம்:

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பொய்கைபாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரசாத்(20) இவர் சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
   
  நேற்று முன்தினம் இவருக்கு பிறந்தநாள் என்பதால் பிறந்தநாளை கொண்டாடிய இவர் அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பக்கத்து தெருவான பள்ளிக்கூட தெருவுக்கு சென்று  பிறந்தநாள் மகிழ்ச்சியில் வேகமாக அங்குமிங்கும் வாகனத்தை ஓட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

  இதை பள்ளிக்கூட தெருவை  சேர்ந்த சென்னையில் தனியார் கம்பெனியில் சேலை செய்து வரும் சதீஷ் (வயது 40) ் அவரது தந்தை கோபால் ஆகியோர் பிரசாத்தை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் சதீஷ்க்கு பிரசாத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் பிரசாத் சதீஷை தாக்க முயன்ற போது  சதீஷ் மற்றும்  கோபால் இருவரும் சேர்ந்து பிரசாத்தை தாக்கி உள்ளனர்.

  மேலும்  கீழே இருந்த கட்டையை எடுத்து பிரசாத்தின் தலையில் தாக்கினர். இதில் பிரசாத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
  Next Story
  ×