என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்த காட்சி.
சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம்
சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நடந்தது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 11-ந்தேதி வெகுவிமரிசையாக படுகளம் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனன் மற்றும் பீமன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தார்.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இரவு தீமிதி திருவிழாவில் 500 க்கும் மேற்ப்பட்டோர் காப்புகட்டி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவை கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story