search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்த காட்சி.
    X
    வேலூரில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்த காட்சி.

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் இன்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன் பாபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அத்தியூர் ஊராட்சியில் உள்ள குறு மலை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை.

    பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அங்கு தற்காலிகமாக சுகாதார மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் வாகன ஏற்பாடு செய்யும்வரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து வாடகை வாகனம் ஏற்பாடு செய்வது,

    முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றியத்துக்கு6 விளம்பரப் பலகைகள் மற்றும் ஒரு ஊராட்சிக்கு இரண்டு என 36 விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×