என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் அவருடைய மகன் பிரபாகரன் (வயது9) இருவரும் நேற்றுமுன் தினம் ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்தனர்.

  இந்நிலையில் ஆண்டியப்பனூர் பகுதியில் வசிக்கும் ரமேஷ் மகன்கள் உதயகுமார் (11), சரவணன் (9) ஆகிய இருவரும் பார்த்திபன், பிரபாகரன் என மொத்தம் 4,பேரும் இருனாபட்டு எகிலி ஏரியில் மீன் பிடிக்க சென்றனர். 

  அப்போது ஏரி கிழ்பகுதிக்கு உதயகுமார் மற்றும் பிரபாகரன் 2 பேரும் ஏரிக்குள் இறங்கினர். அப் போது சேற்றில் சிக்கி கூச்சலிட்டனர். அதற்குள் சேற்றில் சிக்கி  தண்ணீரில் மூழ்கினர்.

  இதனைக் கண்ட உடன் அருகில் இருந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்,என கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து காப்பற்ற முடியவில்லை.

  நீண்ட நேரமாகியும் உள்ளே இறங்கிய மாணவர்கள் வெளியே வராததால் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

  போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரிக்குள் சென்று மூழ்கிய பிரபாகரன் மற்றும் உதயகுமார் ஆகியோரை ஏரியில் இருந்து மீட்டு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×