search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
    X
    தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

    மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

    மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்த ளூர், மேலஆராயத்தெரு ஸ்ரீ மேல முத்து மாரியம்மன் கோயிலின் 78-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. 

    விழாவை முன்னிட்டு கடந்த வாரம் பூச்சொரித லுடன் காப்பு கட்டி விழா துவங்கியது.  தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு தெருவாசிகளால்அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தனர். ஸ்ரீ காத்தவராய சுவாமி கழுகு ஏறுதலும், திருக்கல்யாண வைபோ கமும் நடைபெற்றது. 

    16-ம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா காவிரிகரை யிலிருந்து மங்கலவாத்திய ங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டுஆலயம் வந்தடைந்தது. முத்து மாரியம்மன் காத்தவராய சுவாமி எழுந்துகாட்சிதர ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்ட த்தில் சக்திகரகம் இறங்கியது. 

    தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். காவடி எடுத்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி ஆனந்த நடனமாடி கோவிலை சுற்றி வந்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.  தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்கார த்தில் எழுந்தருளிமகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் மார்க்கெட் கணேசன், முன்னாள் கவுன்சிலர் ரகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

    Next Story
    ×