என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.
  X
  திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.

  தென்காசி அருகே உலக நன்மை வேண்டி 208 திருவிளக்கு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசி அருகே கணக்கபிள்ளைவலசை கிராமத்தில் உலக நன்மை வேண்டி 208 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
  செங்கோட்டை:

  தென்காசி மாவட்டம் கணக்கபிள்ளைவலசை கிராமத்தில் அமைந்துள்ள குளத்தூர் அய்யனார்   கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் மற்றும் விவேகானந்த கேந்திரம் சார்பில் நாடு செழிக்கவும்,  மழை வேண்டியும்  உலக மக்கள் நோய் நொடியிலிருந்து விடுபவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  முன்னதாக குளத்தூர் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு   சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. கேந்திர மூத்த தொணடர்களான சகோதரிகள் செல்வி, குமாரி, அகிலா,  வனராணி ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  முதல் திருவிளக்கினை ஏற்றி  வழிபாடினை நடத்தினர்.

  அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் 208 பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடினை நடத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×