என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முட்டை
  X
  முட்டை

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.45 ஆக சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு 30 பைசா சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.

  தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காகவும் முட்டை லோடுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

  இந்த நிலையில் இன்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.75 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 30 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு 30 பைசா சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  கடந்த ஒரு வாரமாக 2 நாட்களுக்கு ஒரு முறை என முட்டை விலை உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 12-ம் தேதி ரூ.3.65 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்ந்து ரூ.3.90 ஆனது. இதையடுத்து 14-ந்தேதி 25 பைசா மற்றும்16-ந்தேதி 35 பைசா, 19-ந்தேதி 25 பைசா உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 505, பர்வாலா- 355, பெங்களூர் -485, டெல்லி- 400, ஹைதராபாத்- 420, மும்பை- 520, மைசூர்- 465, விஜயவாடா- 430, ஹெஸ்பேட்- 445, கொல்கத்தா- 480.

  பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.126 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 100 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
  Next Story
  ×