என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  ஆட்டோவை அடித்து நொறுக்கியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்டோவை அடித்து நொறுக்கியவர் கைது செய்யப்பட்டார்
  மதுரை

  தெப்பக்குளம் சின்ன கத்தியனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாண்டியம்மாள் (35). இவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். பாண்டியம்மாளிடம் அதே பகுதியில் வசிக்கும் திருமலைராஜனின் (44) மனைவி சீட்டு போட்டு இருந்தார். 

  அவர் பாண்டியம்மாளிடம் ரூ.1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினாராம்.  அந்த பெண் மாதாந்திர சீட்டு தொகையை சரிவர செலுத்தவில்லை. பாண்டியம்மாள் மாதாந்திர சீட்டு தொகையை திருமலைராஜனிடம் கேட்டுள்ளார். 
    
  ஆத்திரம் அடைந்த அவர், பாண்டியம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டார். இது குறித்து பாண்டியம்மாள் தெப்பகுளம் போலீசில் புகார் செய்தார்.  இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×