என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
  X
  அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

  கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- நெல்லையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  நெல்லை:

  அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் நெல்லை மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மேல குலவணிகர்புரம் நடைபெற்றது.

  மாநில தலைவர் மகா லிங்கம் தலைமை தாங்கி னார். கட்டுமான தொழிலா ளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

  அதனை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி அடுத்த மாதம் 20-ந்தேதி விழுப்பு ரத்திலும், ஜூலை 4-ந்தேதி நெல்லையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத் தொகையை ரூ.500-ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று வர மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

  கூட்டத்தில் நிர்வாகிகள் ரத்தினம், பேச்சியப்பன் , மலையப்பன், சக்திவேல், பழனிச்சாமி, பழனி, மகா ராஜன், ஆறுமுகம், வெள்ளைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×