என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கொளத்தூரில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொளத்தூரில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொளத்தூர்:

  கொளத்தூர், செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேகா தேவி (வயது38). இவருக்கும் மதுரையை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சதீஷ் தற்போது பெங்களூருவில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். குழந்தை இல்லாத நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக ரேகாதேவி கொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது ரேகா தேவி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் கணவர் பணம் நகை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் எழுதி உள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×